மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்கள் நீங்கள் எதிர்பார்க்க கூடிய நன்மைகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. பெண்களுக்கு அலட்சியம் ஆபத்தை கொடுக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்கள் நீங்கள் இன்றைய நாள் இனிய பலன்களை அனுபவிக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட பயணங்கள் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்கள் நீங்கள் எதையும் சிந்திக்காமல் முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தொடர்ந்து தடைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்கள் நீங்கள் தொடர்ந்து உங்களுடைய வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரியும். தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்தது கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்கள் நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. உங்களுடைய பொறுமைக்கு அனுகூல பலன் கிடைக்கும். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் பெரியவர்கள் சொல்வதை அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் நீங்கள் இன்றைய நாள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்கள் நீங்கள் நேர்மறையாக சிந்திப்பது நல்லது. குறுக்கு வழியில் செல்லாமல் இருப்பது அனுகூல பலன் கொடுக்கும். சுற்றியிருப்பவர்கள் உடைய சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. பேச்சில் இனிமை இருந்தால் அமைதி நிச்சயம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் நீங்கள் சுயமாக சிந்திப்பது நல்லது. மற்றவர்களுடைய பேச்சை கேட்டு எடுக்கும் முடிவுகள் ஆபத்தை கொடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதக பலன் ஏற்படும். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இணக்கமாக செல்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்கள் நீங்கள் புதிய விஷயங்கள் மற்றவர்களுக்கு உந்துகோலாக இருக்கும். தேவையற்ற விமர்சனங்களை தகர்த்து எறிந்துவிட்டு வெற்றி நடை போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை தயங்காமல் முன் வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். எதிலும் மவுனம் காப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்கள் நீங்கள் நினைக்கக் கூடிய விஷயங்களுக்கு எதிர்மறையாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண விரயங்கள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை நடக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்கள் நீங்கள் உங்களுடைய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். பணியில் உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பை அதிகமாகவே கொடுக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.