மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலன் கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுயநலம் கருதாமல் பொது நலமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உங்கள் பேச்சுக்கு வெளி இடங்களில் மதிப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் முன்னேற்றம் நிச்சயம். கணவன் மனைவி உறவு சிக்கல் முடிவுக்கு வரும். தேவையற்ற பிரச்சனைகளை பற்றி மனசில் போட்டுக் கொள்ளாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூல பலன் பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி தீர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் கவனம் தேவை. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுமான வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் பார்த்து பழகுவது நல்லது. சமயோசித புத்தி உங்களை முன்னேற்றம் அடைய செய்யும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் பண வரவுக்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த லாபம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் மூலம் மன அமைதி கிடைக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை ஆற போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்றம் காணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வளர்க்காமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான விஷயங்கள் அனுப்புற பலன் கிடைக்கப் போகிறது. ஆரோக்கியத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு உதவிகரமாக இருக்க போகிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் அமையலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகளை, அமைதியான சூழ்நிலையில் பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய கூடுதல் உழைப்பைக் கொடுத்து முன்னேறக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் காணும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் நிரூபித்து காட்டி அடைய வேண்டிய அவசியம் இல்லை. பல விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களிலிருந்து சுப செய்திகள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.