மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மூத்தவர்கள் சொல் கேட்டு நடந்து கொள்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் உடைய எண்ணங்கள் பலிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும் என்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உங்களை விட்டு நீங்கியவர்கள் மனம் திருந்தி வர வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை வலுவாகும். சக மனிதனை மதிப்பு போற்றுவது சமுதாய அக்கறையை காட்டும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் பணிச் சுமையை ஏற்படுத்தும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு விரைவில் பலன் கிடைக்க இருக்கிறது. முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த நஷ்டங்கள் குறையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கண்காணிப்பு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கருத்துகளை தைரியமாக முன் வைப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நுண்ணிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய முழு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலை உள்ளது. எதிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஏற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் பாதிப்புகள் குறையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக சிந்திக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமான உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.