மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும் என்பது பொருளாதார முன்னேற்றம் காணும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்றி மற்றவர்களிடம் மதிப்பை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்துவந்த போட்டிகள் விலகும். புதிய நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் மனதில் இருக்கும் குறைகளை நீக்கி தெளிவு பெற்று கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும் என்பதால் தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு திருப்தியாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்கால அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு திடீர் கோபம் ஏற்படும் வரை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு காரியத்திலும் நெருக்கடியான நிலை ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பணவரத்து தடையில்லாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். குடும்பத்தில் உற்சாகமும் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையிலான அமைப்பு என்பதால் அவர்கள் தேவையை அறிந்து பூர்த்தி செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் பின்னடைவு ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிக்கல்கள் தீரும். பொருளாதாரம் ஏற்றம் பெறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற சிறு சிறு சண்டைகள் வரும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வணிக ரீதியான சிந்தனைகள் மேலோங்கி காணப்படலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சியில் மெத்தனப்போக்கு இருக்கும் என்பதால் பொறுமை அதிகம் தேவைப்படக் கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆளுமைத்திறன் அதிகரிக்கும் என்பதால் அனைவரின் மனதிலும் மதிப்பும் மரியாதையும் உயரும். வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் கட்டுக்குள் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இருந்து வந்த காரிய தடைகள் அகல கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெற்றோர்களின் அக்கறையின் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற விருப்பு வெறுப்புகளை மறந்து ஒற்றுமையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எடுக்கும் காரியங்களில் மெத்தனப்போக்கு இருக்கும் எனவே சுறு சுறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறும் யோகமுண்டு. உங்கள் திறமைக்கு சவாலான விஷயங்களை எதிர் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் ஏமாற்றத்தைக் கொடுக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குதூகலமான சூழ்நிலை இருக்கும். உங்கள் பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் டென்சனுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வியை அக்கறை தேவை.