மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெற போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு உயரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்கள் சந்திக்க கூடும். நீங்கள் ஒன்று நினைக்க அது வேறொன்று நடந்தாலும் நேர்மறையாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் வரலாம். சுய தொழிலில் ஏற்றம் காணும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் சுயமரியாதையை இழக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செய்கை மற்றவர்களுடைய கவனம் ஈர்க்கும் வண்ணம் இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நலம் தரும். சுயதொழிலில் நீங்கள் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணப்பையை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய விஷயங்களை கையகப்படுத்தும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு அசைவுகளும் கவனிக்கத்தக்கதாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். பொய் வழக்குகளில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இணக்கம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெறுக கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கணநேரக் கோபம் மனதை கனமாக்க கூடும் கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணத்தில் மிகப்பெரிய மாறுதல்களை சந்திக்க இருக்கிறீர்கள். முடியவே முடியாது என்று நினைத்த காரியமும் முடிவுக்கு வரப்போகிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடைந்தே தீரும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயத்தை தைரியமாக முன் வைப்பது நல்லது. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் சாதக பலன் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் ஜெயம் ஆகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புணர்வு அதிகரித்துக் கொள்வது நல்லது. சுட்டித்தனமாகவே இருந்தால் சுய லாபம் காண முடியாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வலுவிழந்த சக்தியையும் மீட்டெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கலை ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் நல்ல பலன் தரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் எனக்கூடும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை வலுவாகும் என்பதால் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சினைகளை பற்றி வெளியில் பேசிக் கொள்ள வேண்டாம். தீட்டிய திட்டங்கள் யாவும் நிறைவேற பொறுமை தேவை. கணவன் மனைவி ஒற்றுமைக்கு விரிசல் விழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் பெரிய லாபம் காண இருக்கிறீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பல அதிகரித்து காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தை செலுத்தாமல், வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருந்தால் நல்லது நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சார்ந்த கூடுதல் அறிவாற்றல் அதிகரிக்கும்.