மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஸ்ட நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் கால தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறுசிறு சண்டை சச்சரவுகள் பெரிதாகாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களுக்கு எதிர்மறையாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற மன சஞ்சலங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றி காட்டும் வாய்ப்புகளை பெறுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்துப் போவது உத்தமம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற சண்டைகள் வந்து செல்லும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு சரக்குகள் விற்பனை ஆகலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பு மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். வருமானம் பெருக கூடிய நல்ல பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோம்பேறித்தனமாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல பலன் உண்டு.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளை வெளிக்கொணர கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைப்பதுதான் சரி என்று அடம் பிடிப்பதை விடுத்து மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளைப் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகக் கூடிய நல்ல நாளாக இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும் நல்ல நாள். பெண்களுக்கு மனோதிடம் கூடும். எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத தொகை கைக்கு வரும். ஆரோக்கியம் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத கடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது உத்தமம்