மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளம் தரும் இனிய நாளாக இருக்கும். பயனுள்ள விஷயங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான முயற்சி நல்ல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் கடினமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்க யோகம் உண்டு. ஆரோக்கியம் ஏற்றும் காணும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உண்மைகள் வெளிவரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விரயங்கள் அதிகம் இருக்கக்கூடிய நாளாக இருக்கிறது. வரக்கூடிய விரயங்களை சுப விரயமாக மாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே மனதை அலைபாய விடாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் தவிர்த்து மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பால் உயரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. இதுவரை கிடைக்கவில்லையே என்று நினைத்து அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க புதிய யுக்திகளை கையாள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விட விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் தானாக வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துன்பங்கள் தொலையும் இனிய நாளாக இரு கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைய விஷயங்களை பற்றிய புரிந்துணர்வு ஏற்படும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய கை ஓங்கி இருக்குமாறு நடந்து கொள்வது நல்லது. திட்டமிடல் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி அடைய செய்யும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தளர்ந்து போன தன்னம்பிக்கை மீண்டும் துளிர் விடக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உங்களுடைய உழைப்பை மட்டும் கொடுப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிப்பதில் உத்வேகம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. புதிய முயற்சிகளை துவங்கும் பொழுது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வான நிலை உண்டாக மற்றவர்களை காட்டிலும் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உபயோகமுள்ள வழியில் உங்களை ஆற்றலை செலுத்துவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது. பொருளாதார ரீதியான பற்றாக்குறை சீராகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்க முடிவுகளில் தடுமாற்றம் ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுக்காமல் பேசுவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் மேலும் வலுவாகும் என்பதால் உங்களுடைய திறமையை கூடுதலாக வளர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம் சிக்கனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். ஆரோக்கிய அக்கறை தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் வேண்டும். மற்றவர்களுடைய விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் விழிப்புணர்வு தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான முயற்சி வெற்றியை தரும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுதந்திரமான உணர்வை தரும் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு பெருக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முயற்சியின் பலனாக நினைத்ததை சாதிப்பீர்கள். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.