மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அனுகூலமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு முரண்பாடுகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றமான அமைப்பு என்பதால் வருமானம் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்கோபம் நல்லதல்ல.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நடவடிக்கைகள் மற்றவர்களால் கண்காணிக்கப்படும். தொலைதூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை புதிதாக ஊக்குவித்துக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் உத்வேகத்தை கொடுக்கும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் வெற்றிகளை குவிக்கும் படியாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படக்கூடும் என்பதால் திட்டமிடுதல் அவசியமாகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. சுப காரியம் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சொந்த விஷயத்தில் தேவையற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் வரும் என்பதால் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையில் விரிசல் விழக்கூடும். அமைதி காப்பது உத்தமம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நபர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளியிடங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதித்து காட்டுவீர்கள். சுப காரியம் முயற்சிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே வார்த்தையில் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் சக்தியை மற்றவர்களுக்காக பயன்படுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளை செய்வதில் கவனம் செலுத்துங்கள். துறை சார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் மௌனம் நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் அளவோடு ஈடுபடுவது நல்லது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை உணர்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வீர்கள். உங்கள் திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். பெண்கள் வீண் அலைச்சலை தவிர்க்கவும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அவமானங்கள் ஏற்படக்கூடும் என்பதால் சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பொருளாதார ஏற்றம் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும். உபயோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் உங்களுக்கு புது தன்னம்பிக்கையை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களை பெறுவதில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கப் போகிறது.