மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக அமைய போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகத்தோடு இந்த நாள் நிறைவடையும் என்பதில் சந்தேகமில்லை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. எதிர்பாராத நல்ல செய்தி செவிகளை வந்து சேரும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவெடுக்க வேண்டும் என்றால் இந்த நாள் சிறந்தது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் துணிச்சலோடு செயல்படப் போகிறீர்கள். எல்லா விஷயத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அதில் வெற்றி கொள்ளக்கூடிய நாளாகவும் அமையப்போகின்றது. மனக்கவலை நீங்கும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
கடகம்:
இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்யும். மனக்குழப்பம் இருக்கும். இருப்பினும் உங்களுக்கு பிடித்த இறைவனின் நாமத்தை உச்சரித்து உங்களுடைய மனதை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள். அனாவசியமாக எந்த விஷயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டாம். பெரியதாக பாதிப்பு இருக்காது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்கவேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. அனாவசியமாக அடுத்தவர்களை கோபப்பட்டு திட்டாதீங்க. உங்க வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருந்தால் நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று மன கவலைகளை மறந்து உற்சாகமாக இருக்க போகிறீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை கழிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. கையில் இருக்கும் பணமும் கொஞ்சம் கரையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கப்போகிறது. மன மகிழ்ச்சியோடு செய்யும் வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாராக தான் இருக்கும். பெரியதாக பயப்பட எந்த பிரச்சினையும் கிடையாது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். யாரிடமிருந்தும் கைநீட்டி பணம் வாங்க வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலைகளை கொஞ்சம் கவனத்தோடு செய்தாலே போதும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்ல விஷயம் உங்களுடைய மனதை சந்தோஷப்படுத்தும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். முடிந்தால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது மேலும் நன்மையை தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் இன்று பெரிய பெரிய விஷயங்களை கூட சாதாரணமாக செய்துவிட்டு செல்வீர்கள். கஷ்டம் என்பதை உங்களுக்கு இன்றைக்கு கிடையாது. சந்தோஷமாக சுலபமாக ஜாலியா இருக்க போறீங்க. எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லேசாக மனக்கவலை இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் எப்போது தான் முன்னேற போகின்றோம். கஷ்டங்கள் எப்போது தான் நம்மை விட்டு விலகும், என்று யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இருப்பினும் இன்றைய நாள் இறுதியில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உண்டு.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை என்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏதோ ஒரு புத்துணர்ச்சியோடு சுற்றி வருவீர்கள். திங்கட்கிழமை எல்லாம் சரியாகிவிடும்.