மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுப காரியம் முயற்சிகளை ஒத்தி வையுங்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீர மனம் விட்டு பேசுவது நல்லது. சுய தொழிலில் வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுபவம் உதவும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை முடிக்க சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் வரக்கூடும் என்பதால் விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவு சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமப்பீர்கள். வேலை பல அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய அமைப்பு உள்ளதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன்களை தரும் அமைப்பாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி சூடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் கவனம் தேவை. உங்களுடன் இருந்து கொண்டே உங்களை சிலர் ஏமாற்ற கூடும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலான காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. அலட்சியம் சில இழப்புகளை ஏற்படுத்தும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் சாதிக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு கொண்டு இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் சிரமமான வேலையையும் சுலபமாக முடிப்பீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூல பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் இழந்ததை அடையக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுய முடிவுகள் சாதக பலன் கொடுக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும் இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலட்சுமி அதிகரிக்க கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றி வாகை தரும். எடுக்கக்கூடிய முடிவுகள் சாதக பலன் பெறும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள்.