மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களை பெற போகிற இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் திறமையை மற்றவர்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தருணமாக அமையும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்து வைக்க இருக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுப காரிய முயற்சிகளில் தடைகள் வரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு உரிய பலன்களை அனுபவிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. பேச்சில் இனிமை இல்லாவிட்டால் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப் பலன் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. பணம் பல வழிகளில் வந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடல் சோர்வு ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை காணப்படும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சகோதர, சகோதரிகளுக்கு இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகளை பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகம் அதிகரித்து காணப்படுவீர்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். நல்ல ஒரு தெளிவான சிந்தனை இருந்தால் வெற்றி உங்கள் பக்கம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தொடரும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் சிந்திப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முனைவீர்கள். வெளியிட பயணங்கள் மூலம் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையில் புரிதல் ஏற்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில நல்ல இனிமையான விஷயங்களை அனுபவிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தியுண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்க கூடிய விஷயங்களில் காலதாமதமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுப காரியத்தில் இருக்கும் தடைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சாதகப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். கடமையில் கூடுதல் கண்ணியத்துடன் இருப்பது நல்லது. இறை வழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.