இந்தியாவின் கோடிஸ்வர வியாபாரியான கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று (25) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடல் தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தந்த கௌதம் அதான உட்பட்ட குழுவினர் மன்னாரிற்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.