இந்த வருடத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு 20,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் தற்காலிக தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 7 ஆம் திகதிக்கு இடையில் 20,875 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
1.6 சதவீதம் அதிகரிப்பு
அதேவேளை கடந்தாண்டு இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது வருகை 1.6 சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.
இதேபோல், 2023 ஜனவரி முதல் வாரத்தில் இலங்கையின் சுற்றுலாப் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது ரஷ்ய ஆகும், இது மொத்த வருகையில் 28 சதவீதத்தை கொண்டுள்ளது.
அத்துடன் இரண்டாவது இடத்தில் இந்தியா, மொத்த சுற்றுலாப் பயணிகளில் 11 சதவிகிதம் மற்றும் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது.