சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில், டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
105 டிப்போக்களில் இந்த பஸ்கள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த பஸ்கள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.