ஆளுநர் செயலகத்திற்கு முன் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் காலையிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணிவரை இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வடமாகாண ஆளுநர் போராட்டம் நடத்திய முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநரின் கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்வதற்காக ஆளுநர் செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாட விடுமாறு கடமையிலிருந்த பொலிஸாரை ஊடகவியலாளர்கள் கேட்டனர்.
இதன்போது பதிலளித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளே சென்றுவிட்டார் உங்களை அனுமதிக்க முடியாது எனப் பதிலளித்தார்.
இதனையடுத்து குறித்த விடயம் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.