நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இனவாதக் கருத்துக்கள்
அத்துடன்”நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தைகள் தொடர்பில் அனைவரும் நன்கு அறிவர். எனவே, அவர் முன்வைக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கமோ அல்லது மக்களோ பதற்றமடையத் தேவையில்லை.
அவர் கூறுவதை எவரும் கவனத்தில் எடுப்பதுமில்லை. எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரால் தெரிவிக்கப்படும் இனவாதக் கருத்துக்களுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. அவை முற்றிலும் அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது.
மக்களும் இவ்வாறான கருத்துக்களை அங்கீகரிக்கப் போவதில்லை” என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

