கடந்த 09ஆம் திகதி மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை ஒரு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த போது கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான அதிகாரி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வருகின்றனர். இந்நிலையில் உத்தியோகபூர்வ உடைகள் மற்றும் காலணிகளை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு தங்கியிருந்தமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், எனினும், பொலிஸ் தலைமையகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.