அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான குறித்த தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அருகில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.