அனைத்து சேவைகளின் விலையும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, புகைப்பட பிரதி (Photo copy) ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதனை இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.