வெள்ளவத்தை கடலோர காவற்படை முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய குறித்த நபரின் சடலத்தில் காயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.