அக்கரைப்பற்றில் கஞ்சாவுடன் தனியார் பேருந்து நடத்துனர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த சமயத்தில் பேருந்து நடத்துனர் பேருந்தில் கஞ்சா வைத்திருந்துள்ளார் மேலும் அதனைப் பெறுவதற்கு அக்கரைப்பற்றை சேர்ந்த ஒருவர் வருகை தந்தார்.
இந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் மருதானையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இருவரும் அக்கரைப்பற்று பேருந்து நிலையத்தில் காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.