இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த X-press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மீளப் பெறுவதை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையை கணக்காய்வாளர் நாயகம் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
கப்பலின் சேத மதிப்பீடு மற்றும் நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கை
கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான நட்டஈட்டை மீளப்பெறும் நடவடிக்கை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
X-Press Pearl கப்பல் இலங்கைக் கடலில் மூழ்கிய போது கப்பலில் 81 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் அதில் 25 டன் நைட்ரிக் அமிலம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.