வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு ,பயன் தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
இதன்போது வீட்டு உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன, அத்தோடு வீட்டில் இருந்த அரிசி மூடைகளையும் யானைகள் இழுத்துச் சாப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
காட்டு யானையால் பாதிக்கப்பட்ட தமக்கு பாதுகாப்பு வேலி அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.