லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
LPL தொடரின் 11 நாட்கள் நடைபெற்ற 20 போட்டிகளின் பின்னர் kandy Falcons, Jaffna Kings, Galle Gladiators மற்றும் Colombo Stars அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
போட்டியின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது ஆட்டம் Jaffna Kings மற்றும் kandy Falcons அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டி இன்று (21) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி டிசம்பர் 22ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.
போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி Colombo Stars மற்றும் Galle Gladiators அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, எல்.பி.எல் போட்டியை பார்வையாளர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று ஆரம்பமாகவுள்ள அரையிறுதிப் போட்டிகளை ரசிகர்கள் பார்வையிடுவதற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தின் சி மற்றும் டி ஆடிட்டோரியத்தின் கீழ் பகுதியில் இருந்து பார்வையாளர்களுக்கு போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.