2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் Jaffna Kings அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Dambulla Aura அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் Jordan Cox அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் விஜயகாந்த் வியாஷ்காந்த ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் Jaffna Kings அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் Jaffna Kings அணி சார்ப்பில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணாட்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இம்முறை லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் உள்நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை “Ada Derana 24” தொலைக்காட்சி அலைவரிசை தனதாக்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு Dialog TV மற்றும் Peo TV அலைவரிசை எண் 14 இல் மட்டும் ஒளிபரப்பு செய்யத் தொடங்கிய “Ada Derana 24” தொலைக்காட்சி அலைவரிசையை தற்போது சாதாரண தொலைக்காட்சியிலும் கண்டு மகிழலாம்.
அதன்படி, கொழும்பில் இருந்து UHF 26, தெனியாவில் இருந்து UHF 35, கண்டியில் இருந்து UHF 28 மற்றும் மாத்தளையில் இருந்து UHF 35 ஆகியவற்றிலிருந்து “அத தெரண 24” தொலைக்காட்சி அலைவரிசையை காண முடியும்.
இப்போட்டி முதல் LPL போட்டித் தொடரின் அனைத்து போட்டிகளையும் அத தெரண யூடியூப் ஊடாகவும் நேரடியாக காணலாம்.