Jaffna Kings மற்றும் Dambulla Aura அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Dambulla Aura முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 73 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்ணான்டோ 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனடிப்படையில் Dambulla Aura அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Dambulla Aura நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் தசுன் ஷானக அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் பினுர பெர்ணான்டோ 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனடிப்படையில் Jaffna Kings அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டில் வெற்றிபெற்றுள்ளது.