Browsing: மருத்துவம்

விரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தை பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அவ்வகையில் உதட்டிற்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை!… கூடவே குளிர்ச்சிக்கு…

நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஏராளமான நன்மைகளும், சத்துக்களும் கொட்டிக்கிடக்கின்றன.அதில் பாரம்பரிய அரிசி வகைகளில் கவுணி அரிசி குடும்ப வகையை சேர்ந்தது சிவப்பு கவுணி அரிசி.இது சற்று…

தற்காலத்தில் மிகவும் பேசப்படவேண்டிய தலைப்புகளில் ஒன்று எனினும், விண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். இதோ விரிவாய் தெளிவாய்…

சூயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதனை விரும்பி அசைபோடுகிறார்கள்.சிறுவர்-சிறுமியர்களை கவரவேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில், வடிவங்களில் சூயிங்கம் கடைகளில்…

சீரகம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கும். அந்த சீரகத்தின் நன்மைகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். சீரகமானது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.சீரகத் தண்ணீரை…

பல நோய்களுக்கு தீர்வாக அமையும் துத்தி இலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். துத்தி இலை,பூ, விதை, வேர் மற்றும் பட்டை ஆகியவை மருத்துவப்…

கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் தண்ணீர்…

ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த…

1.வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு சிறிதளவு பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிட வேண்டும். 2.இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை…

நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது.

நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.

நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இன்றைய தலைமுறையினருக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான அடையாளம் அப்படியே இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது, நலங்கு மாவு. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.

வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு, நிறைய பேர் செயற்கை வாசனை பொருட்களை உபயோகிக்கின்றனர். கை இடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது, சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கி அதுவே பெரிய தொந்தரவை கொடுத்து விடும். வெயில் சுட்டெரித்தால், வெளியில் செல்லவே பயப்படுவர்.

நலங்குமாவை பயன்படுத்தி, வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு, நலங்கு மாவை தேய்த்து குளிக்க வைப்பதால், அவர்களின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.