‘குஷ்’ கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘Green Channel’ வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் நான்கு பயணப் பைகளில் 12 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் மற்றும் 476 கிராம் ‘குஷ்’ கஞ்சாவை அதிகாரிகள் சோதனையின் போது மீட்டனர்.
அவற்றின் பெறுமதி 104.76 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் 25 மற்றும் 26 வயதுடைய பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் பேங்கொக்கில் போதைப்பொருளை வாங்கி பின்னர், புது டெல்லி வழியாகப் பயணித்து இன்று (26) அதிகாலை சுமார் 5:20 மணியளவில் ஏர் இந்தியா விமானம் கொழும்பபை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைக்காக, சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

