கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையம் முன்பாக இருந்த பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

