அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (23) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் எழுத்துமூல முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் குறித்த எழுத்துமூல முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர்.
அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமர்வில் கையளிக்கும் பொருட்டு இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

