பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்காகவும் புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் 071-8598888 எனும் புதிய WhatsApp இலக்கம் இன்றிலிருந்து (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காகவும், வீடியோ மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும்.
அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ் இலக்கத்தினூடாக தங்களின் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

