கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் இரண்டு மாத காலப்பகுதியில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதற்கு உபகரணங்களில் ஏற்பட்ட கோளாறே காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடைய நோயாளி ஒருவர் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் உள்ளூர் வைத்தியசாலை வைத்தியரின் தந்தை என தெரியவந்துள்ளது.
சிறுநீரகம் செயலிழந்த நபரின் சிறுநீரகங்கள் 93 சத விதத்திற்கும் அதிகமாக செயற்படாமல் இருந்தால், அவர்கள் ஹீமோடையாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
மற்ற நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைத்தியசாலை மூலமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

