விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் மீது தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என முன்பே படக்குழு அறிவித்து இருக்கிறது. பொதுவாக விஜய் படத்திற்கு போட்டியாக வர படங்கள் தயக்கம் காட்டுவது வழக்கம் தான். விஜய்க்கு தான் அதிகம் தியேட்டர்கள் கிடைக்கும் என்பது அதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்து இருக்கும் ஜப்பான் படத்தினை லியோவுக்கு போட்டியாக களமிறக்க இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே விஜய்யின் பிகில் உடன் கார்த்தியின் கைதி படம் மோதி நல்ல வசூலும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் விஜய்க்கு போட்டியாக கார்த்தி வர இருப்பதால், இந்த முறை அதே வசூல் திரும்ப நடக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

