தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக மேலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்ததாகவும் இதன் பலன் நேரடியாக நுகர்வோருக்குச் செல்லும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு மற்றும் மிளகாய் போன்ற நுகர்வோர் பொருட்கள் நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும் என்றும், அதன் பயனை நுகர்வோர் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.