மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு இலக்கான நபரின் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் துண்டிக்கப்பட்ட கைகள் தாக்கிய நபரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் மொரட்டுவை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் துண்டிக்கப்பட்ட கை பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு எடுக்கப்பட்ட கை பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது.