வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.