வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், பயன்படுத்திய வாகன விற்பனை சந்தைக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கடன் வட்டி வீதத்தை குறைப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்ததாகவும் சங்கம் கூறுகிறது.
இந்நிலையில் பயன்படுத்திய வாகனங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டால், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான சந்தையை மேலும் பராமரிக்க முடியும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.