இலங்கைக்கு சுமார் 92 பேர் அடங்கிய வட இந்திய தொழிலதிபர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத் தலைவர் சுலானி தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
மேலும், முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் பங்கேற்கவுள்ளார்.
இந்திய தொழிலதிபர்களின் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை – இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டுள்ளார்.