வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் முடியுமுன் மற்றுமொரு மாணவனின் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவபீடத்துக்கு தெரிவான மாணவர்
வவுனியாவில் தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் 2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ எடுத்து மருத்துவபீடத்துக்கு தெரிவாகிய மாணவரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவனின் தந்தை பிரபல வைத்தியர் எனவும் கூறப்படுகின்றது. அதேவெளை உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் மாணவனின் தாயார், தனது மகன் வருங்காலத்தில் இருதயசிகிச்சை நிபுணராக வரவிரும்புவதாக கூறியிருந்தார்.
அத்துடன் உயிரிழந்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று தேசிய ரீதியில் 39வது இடத்தையும் பெற்றவராவார்.
இந்நிலையில் மாணவரின் தற்கொலை செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.