நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது சம்பளத்தில் இருந்து உரிய வரியை அறவிடுவது சட்டவிரோதமானது என 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தது.