தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் போட்டியாளாராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்தான் இலங்கைப் பெண் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது.
இவ்வாறான நிலையில் பிரண்ஷிப், கூகுள் குட்டப்பான் படங்களில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்திருந்தார். இருப்பினும் குறித்த படங்கள் அவர் எதிர்பார்த்தளவு வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்நிலையில், சமீப காலமாக லாஸ்லியா பல நாடுகளுக்கும் சென்று அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இவ்வாறு இருக்கையில் தற்போது இணையதள விளம்பரம் ஒன்றில் நடித்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.