இராஜகிரியிலுள்ள வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.