ஹட்டனில் வலம்புரி சங்கு ஒன்றை ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, நுவரெலியா விசேட அதிரடிப் படையினர், நேற்றிரவு குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது அரிசி கொள்கலன் ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வலம்புரி சங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட இருவர், வலம்புரி சங்குடன் ஹட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.