மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினர் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.