விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 பல்கலைக்கழக மாணவர்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநிதா விஜேசேகர உத்தரவிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கும் தலா 15,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையும் வழங்குமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சந்தேகநபர்களுக்கு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய நீதவான், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.