மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பலன்கள் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவுகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தைரியம் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனினும் அது நலமாகவே அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பல தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். குடும்ப அமைதிக்கு பல்லை கடித்துக் கொண்டு விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் உற்சாகம் நிறைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணரீதியான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் தரும் அமைப்பாக இருக்கிறது. சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி நினைத்தது நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சொல்லும் சொல்லில் பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்கோபம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். சுப காரியங்களில் தொய்வு ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயநலம் பாராமல் பொதுநலமாக இருப்பது நலம் தரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கைநழுவிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சிறு சிறு பிரச்சனைகள் குடும்பத்தில் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மையுடன் இருக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. குறுக்கு வழியை தேட வேண்டாம். சுப காரியங்களில் அலைச்சல் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் அக்கறை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் வெறுப்புகள் குறையும். சுப முயற்சிகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிக்கனம் தேவை, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமாக எதுவும் கிடைக்காது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த ஏணிப்படிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்யும் செயலில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் வந்து சேரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பாரம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சோர்வு உண்டாகலாம், விடா முயற்சி தேவை. கணவன் மனைவி உறவுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒரு ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன பயணங்களில் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க பாடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.