மாரவில பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சோதனையிட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட SLBFE, ருமேனியாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம் பணம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இருவர் கைது
இந்நிலையில் SLBFE இன் விசாரணை அதிகாரிகள் 38 கடவுச்சீட்டுகள், ரூ. 30,000 பணம் மற்றும் பல ஆவணங்கள் சோதனையில் சிக்கியுள்ளன. இந்தச் சுற்றிவளைப்பின் போது வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா 500,000 ரூபா இரண்டு பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு 21 ஜூன் 2023 இல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.