மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் பல வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அமைதியான பேச்சு வார்த்தை நன்று. சுய தொழிலில் லாபம் காண புதிதாக சிந்தியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தை தவிர்க்கவும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல தரப்பட்ட மனிதர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுயதொழியில் உள்ளவர்களுக்கு புதிய லாபம் காண யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுபயோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனம் பெருக வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். குடும்ப விஷயங்களில் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனாவசிய கோபம் தவிர்க்க வேண்டிய ஒன்றாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதையும் போராடித் தான் முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழிகளை ஏற்க வேண்டி வரலாம் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சகோதரர் வகையில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்களில் நன்மைகள் நடக்கும் யோகம் உண்டு. சுப காரிய முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில மாற்றங்கள் அனுகூலமான பலன்களை கொடுக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாகும் வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நினைவாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப பொறுப்புகள் அதிகரித்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டியது கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே நட்பு வளரும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.