இலங்கையில் நாளைய தினம் (17-01-2023) சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து கொண்டமை காரணமாகவே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகளின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த கைதிகள் சமூகமயப்படுத்தப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வெலிக்கடை, பதுளை, அங்குனகொலபலஸ்ஸ, அனுராதபுரம், வீரவில மற்றும் பல்லேகல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 கைதிகளே இவ்வாறு நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்