போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர் .
சட்ட வைத்திய அதிகாரியால் அவரது சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதிகரித்த ஐஸ் போதைப் பொருள் உட்கொண்டமையால் நுரையீரல் மற்றும் உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.